!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ஊழியர்களுக்கு கட்டுப்பாடுஇஷ்டத்திற்கு 'லீவ்' எடுத்தால் சம்பளம் 'கட்'
தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் சேர விரும்பினால், அவரை அனுமதிக்கலாம். 


ஆனால், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவரம், அரசுக்கு வர காலதாமதமாகிறது. உதாரணமாக, 1986ல் முறையாக பணிக்கு வராதவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2015ல் அரசுக்கு பரிந்துரை வந்துள்ளது. அந்த நபரோ, 2000ல் ஓய்வு பெற்றுவிட்டார். இது போன்ற தவறுகளை தடுக்க, விடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சலுகைகளும் ரத்தாகும்* அரசு ஊழியர்கள், அவர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்பு எடுப்பதற்கான விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்
* அரசு ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட விடுப்பை எடுக்க விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் 
* அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டவிடுப்பு முடிந்த பின்னும், விடுப்பு எடுத்தால், அந்த நாளுக்குரிய சம்பளம் மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்படும்* விடுப்பு அளிப்பது, அனுமதிப்பது தொடர்பாக சந்தேகம் என்றால், தாமதமின்றி, அரசுநிர்வாகத் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.
* முன் அனுமதியின்றி, அரசு ஊழியர்கள் அதிக நாள் விடுப்பு எடுத்தால், உடனடியாக, அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்
* அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன், அவர் எடுத்துள்ள விடுப்பு மற்றும் எடுக்காத விடுப்பு விவரங்களை, அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் 
* அரசு ஊழியர்கள் பயிற்சி காலத்தில், மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுக்க அனுமதி கோரினால், 60 நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png