!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அண்ணாமலை பல்கலை 369 பேராசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலையில், அளவுக்கு அதிகமாக பணியில் இருந்த, 369 பேராசிரியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டு, அரசு கலை கல்லுாரிகளின் காலியிடங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் கட்டுப்பாட்டில் இருந்த அண்ணாமலை பல்கலையில், முறைகேடுகள் நடந்ததாலும், ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்காததாலும், பல்கலை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இரு ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்தப் பல்கலையை தமிழக அரசு கையகப்படுத்தி, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 

சீரமைக்கும் பணி
துவக்கத்தில், அரசு சார்பில், பல்கலை நிர்வாகியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவும், அதன் பின் பல்கலை துணை வேந்தராக மணியனும் நியமிக்கப்பட்டனர். 
இதை தொடர்ந்து, பல்கலையின் நிதி நெருக்கடியை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, பல்கலையில் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை, வேறு பணிகளில் நியமிக்கும் வேலை நடந்து வருகிறது. ஏற்கனவே சில ஆசிரியர்கள், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை பணிக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், ஒரே நாளில், 369 பேராசிரியர்கள் ஒட்டு மொத்தமாக, அண்ணாமலை பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில்...இதற்காக, தமிழக உயர்க்கல்வித் துறையும், அண்ணாமலை பல்கலையும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, 369 பேராசிரியர்களும், மூன்று ஆண்டுகளுக்கு அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவர். அவர்களின் ஊதியம், பி.எப்., உள்ளிட்ட அனைத்து நிதி செலவுகளையும், கல்லுாரி கல்வி இயக்ககம் கவனிக்கும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


1௨ ஆயிரம் பேர்

* தற்போதைய நிலவரப்படி, அண்ணாமலை பல்கலையில், 2,609 பேராசிரியர்கள் உட்பட, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர் 
* இவர்களில், 369 பேராசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்; இன்னும், 2,500 ஊழியர்கள், 300 பேராசிரியர்கள் விரைவில் மாற்றப்படுவர் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



தமிழக அரசு சமீபத்தில் துவங்கிய, 14 புதிய கல்லுாரிகளில், பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன; அவற்றில் இந்த பேராசிரியர்களை நியமிக்கலாம். மாறாக பல ஆண்டுகளாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை வெளியேற்றி, அந்த இடத்தில் அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களை நியமிப்பது தவறான நடவடிக்கை.சிவராமன், பேராசிரியர் அரசு கல்லுாரி பேராசிரியர் மன்ற பொதுச் செயலர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png