!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

'ஆசிரியராக' இன்று மாறுகிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஆசிரியராக மாறி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அரசியல் அறிவியல் பாடம் எடுக்க உள்ளார்.டில்லி முதல்வர், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டதன் படி, டில்லி மேல்நிலைப் பள்ளி ஒன்றில், சிறிது நேரம் பாடம் நடத்த, பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் சட்டம் படித்துள்ள அவர், பத்திரிகையாளராகவும், பேராசிரியராகவும் இருந்துள்ளார். 1969 முதல் காங்கிரசில் இணைந்து, தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அவரின் ஆசிரியர் ஆசையை அறிந்த முதல்வர் கெஜ்ரிவால், ஒரு நாள் ஆசிரியராக மாறுமாறு கேட்டுக் கொண்டதன் படி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடம் எடுக்க உள்ளார்.
நாட்டின் இரண்டாவது ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஆசிரியராக இருந்தவர் என்பதால், அவரை கவுரவிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டே, ஜனாதிபதி முகர்ஜி, இன்று ஆசிரியராக மாற உள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png