!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 2 செப்டம்பர், 2015

499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்
சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * மாணவர்கள் கணித பாடத்தை எளிய வகையில் கற்க, 1.28 கோடி ரூபாய் செலவில், 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

* பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகளை துவங்கவும், 186 தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் தகுதியான குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
* கணினி வழியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வகுப்புகள் நடத்த, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில், 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
* பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, 'அனிமேஷன்' வகை குறுந்தகடுகள், 1.5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
* பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆசிரியர் தங்க, திருச்சியில், மூன்று கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png