!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 29 ஜூலை, 2015

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு முடிவடைந்தது: 91,473 இடங்கள் காலி

                   பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் முடிவடைந்தது. கடந்த 28 நாட்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 620 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 ஆயிரத்து 473 இடங்கள் காலியாக உள்ளன.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. கடந்த 28 நாட்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வு இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் கலந்தாய்வுக்கு 5,680 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 2,326 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 3,299 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
கடந்த 28 நாட்களில் பொது கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 620 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பில் கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 93 இடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. பொது கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து ஆயிரத்து 620 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய 91 ஆயிரத்து 473 இடங்கள் காலியாக உள்ளன. பொது கலந்தாய்வை தொடர்ந்து தொழிற்கல்வி மாணவர்களுக்கான 2 நாள் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
முதலிடம் பிடித்த மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவை அதிக மாணவர்கள் தேர்வுசெய்துள்ளனர். இப்பிரிவில் 25,355 இடங்கள் நிரம்பியுள்ளன. மெக்கானிக்கல் பிரிவை தொடர்ந்து, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவை 18,069 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவை 14,538 பேரும் தேர்வுசெய்திருக்கிறார்கள். தமிழ்வழி சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் மொத்தமுள்ள 660 இடங்களில் 280 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 719 இடங்களில் 278 இடங்களும் நிரம்பியுள்ளன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png