!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 27 ஜூலை, 2015

மாணவ–மாணவிகளுக்கு பலத்த கெடுபிடி: அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு சென்னையில் 41 மையங்களில் நடந்தது

அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் மாணவ–மாணவிகளுக்கு பலத்த கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. சென்னையில் 41 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

முறைகேடு புகார்
2015–16–ம் ஆண்டிற்கான அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3–ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் நடந்த இந்த தேர்வில் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
நுழைவுத்தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாகவும் புகார் எழுந்தது. எனவே இந்த மருத்துவ நுழைவுத்தேர்வினை ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணையின் முடிவில், நடந்த நுழைவுத்தேர்வினை ரத்து செய்து மீண்டும் மறு நுழைவுத்தேர்வு நடத்திட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வெழுதி இருந்த மாணவ–மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
மறு நுழைவுத்தேர்வு
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான மறு நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்வில் மாணவ–மாணவிகள் தலையில் ‘ஸ்கார்ப்’, முழுக்கை உடையினை அணியக்கூடாது, ஷூ போடக்கூடாது, செருப்பு மட்டும் தான் அணிய வேண்டும், மெல்லிய உடைகள் மட்டுமே அணியவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. ஏற்கனவே விதித்திருந்தது. எனவே ஒவ்வொரு மையங்களிலும் நேற்று போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, முகப்பேர் டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, ஆவடியில் உள்ள கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 41 மையங்கள் இந்த தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 24 ஆயிரத்து 700 பேருக்கு இந்த தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தலைவிரி கோலமாக மாணவிகள்
சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் நேற்று காலை 7.30 மணியில் இருந்தே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தீவிர கெடுபிடிகளுக்கு பின்னரே மாணவ–மாணவிகள் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் தலையில் ஹேர்–பேண்டுகள், கிளிப்புகள், கழுத்தில் தங்கச்சங்கிலி உள்ளிட்ட பொருட்களை தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் நடுரோட்டில் மாணவிகள் தங்கள் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை கழற்றி தங்கள் பெற்றோரிடம் கொடுத்தனர்.
அனுமதிச்சீட்டு மற்றும் தங்களது புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். தனியாக வந்த மாணவ–மாணவிகள் சிலர் அங்குள்ள பெண் போலீசார் மற்றும் பள்ளி காவலாளியிடம் தங்களது ஆபரணங்களை ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
மொத்தம் 3 கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் முதல்கட்ட சோதனையில் மாணவ–மாணவிகளின் உடைகள் கட்டுப்பாடு பரிசோதிக்கப்பட்டது. 2–வது கட்ட சோதனையில் உலோகங்கள் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையிடப்பட்டது. 3–வது கட்ட சோதனையில் பாதங்கள் மற்றும் காதுகள் ‘டார்ச்’ வெளிச்சத்தில் சோதனையிடப்பட்டது.
‘ஸ்கார்ப்’ அணிந்த மாணவிகளுக்கு அனுமதி
தேர்வு எழுத வந்த மாணவிகளில் 3 பேர் தலையில் ‘ஸ்கார்ப்’ அணிந்து வந்தனர். அவர்களிடம் தலையில் உள்ள ‘ஸ்கார்ப்பினை எடுத்துவிட்டு செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதில் ஒரு பெண் முஸ்லிம் என்றும், மற்ற 2 பேர் தங்களுக்கு சரும நோய் இருப்பதாக கூறினர். இதையடுத்து அந்த மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னர், தலையில் ஸ்கார்ப் அணிந்துகொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் தலையில் ‘ஸ்கார்ப்’ மற்றும் அதுபோன்ற ஆடைகளை அணிந்து தேர்வு எழுத தடையில்லை என்று சி.பி.எஸ்.இ. கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png