!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 27 ஜூலை, 2015

1,241 அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்கள் 4.65 லட்சம் பேர்: 1.55 லட்சம் பேர் 'ஆப்சென்ட்:' 2 மாதங்களில் முடிவு

தமிழகத்தில், 1,241 அரசு வேலைக்காக, நேற்று நடந்த, குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 1.55 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 'தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,241 பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, குரூப் - 2 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும், 1,511 மையங்களில் நடந்தது. துணை வணிகவரி அதிகாரி, சார் - நிலை பதிவாளர், சிறைத்துறை பயிற்சி அதிகாரி, லஞ்ச ஒழிப்புப் பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட, 18 வகை பதவிகளுக்கான இந்த தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 6.20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 4.65 லட்சம் பேர் மட்டுமே நேற்று தேர்வுஎழுதினர்; 1.55 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. 

சென்னையில் மட்டும், 199 மையங்களில், 60 ஆயிரம் பேர்தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களுக்குள், எலக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேற்பார்வையாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று நடந்த முதல்நிலைத் தேர்வில், தேர்ச்சி பெறுவோர், பின், பிரதான தேர்வை எழுத வேண்டும். தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்றதும், இறுதிப் பட்டியல் வெளியாகும்.
சென்னையில், நேற்று தேர்வு மையங்களுக்குச் சென்று பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது: குரூப் - 2 தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும். தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள, 89 மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கள் மூலம், நான்காண்டுகளில், 40 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்துள்ளோம். இந்த ஆண்டில் மட்டும், 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆள் மாறாட்டம் தடுக்க தேர்வர்களின்புகைப்பட பட்டியல்:நேற்று நடந்த குரூப் - -2 முதல் நிலைத் தேர்வில், புகைப்படத்துடன் கூடிய தேர்வர்களின் பெயர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது. வழக்கமாக, தேர்வர்களின் பதிவு எண் மட்டும் கண்காணிப்பாளர் களிடம் இருக்கும். தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் தான், புகைப்படம் இருக்கும். ஆனால், கடந்த சில தேர்வுகளில், கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் பட்டியலிலும், தேர்வர்களின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதேபோல், ஹால் டிக்கெட் உட்பட அனைத்து ஆவணங்களிலும், நேற்று தேர்வர்களின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png