!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 24 மே, 2015

மே 24, 1844: முதல் தந்தி அனுப்பப்பட்டது தற்காலத்தில் செல்ஃபோன்களில் உள்ள செயலிகள் மூலம் உலகின் எந்த மூலையிலும் இருக்கும் நபருக்கு நாம் செய்திகளை அனுப்பும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியானது தந்தி சேவை. உலகில் முதல் தந்தி செய்தி அமெரிக்காவின் வாஷிங்டன் டி சியில் இருந்து மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகருக்கு அனுப்பப்பட்டது. விவிலிய வரிகளான WHAT HATH GOD WROUGHT என்பதை முதல் தந்தியில் இடம்பெற்றிருந்த செய்தியாகும். சாமுவேல் பி.மோர்ஸ்(SAMUEL B. MORSE) ஆல் அவரது உதவியாளர் ஆல்பர்ட் வெய்ல் (ALBERT VAIL)-க்கு முதல் தந்தி செய்தி அனுப்பப்பட்டது 1844 ஆம் ஆண்டு மே 24 ஆம் நாளில்தான். மே 24, 1943: மரணத் தூதுவன் வருகை ANGEL OF DEATH - ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப் மாங்கலே (JOSEF MENGELE) அறியப்படுவது இந்த அடைமொழியால்தான். காரணம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் AUSCHWITZ வதைமுகாமில், மனித உயிர்களை மதிக்காமல், அவர் நடத்திய ஆய்வுகளும், நச்சுவாயுவின் மூலம் பலரைக் கொன்று குவித்ததும்தான். வதை முகாமிற்கு வரும் கைதிகளில் வேலை செய்யும் திறன் அற்ற நபர்களை பிரித்து கொலைக்களத்திற்கு அனுப்பும் பணியையும் அவர் கவனித்தார். இத்தகைய கொடூரமான பணிகளை மேற்கொண்ட JOSEF MENGELE AUSCHWITZ வதைமுகாமின் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது 1943 ஆம் ஆண்டு இதே நாளில்தான்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png