!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 27 மார்ச், 2015

உதவி செய்தும் தேர்வில் குறைந்த தேர்ச்சி அடைகின்றனர் ஆதிதிராவிடர் மாணவர்கள் குறித்து அமைச்சர் கவலை
கடலூர்: ""ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பாடு பட வேண்டும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.மாநில அளவிலான மனித நேய விழா நேற்று கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., விஜயா முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் சம்பத் பேசியதாவது: ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் படிப்புக்கு தடை ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தி முதல்வர் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதி திராவிட மாணவ, மாணவியர்களுக்காக முதல்வர் 5.11 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவர்களுக்கு ஏராளமான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு உதவிகளை செய்தும் ஆதிதிராவிட நல மாணவர்கள் தேர்வில் குறைந்த தேர்ச்சி அடைகின்றனர்.இந்த ஆண்டு மற்ற பள்ளிகளைப் போல் ஆதிதிராவிட நல பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 80 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விழாவின் மூலம் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணி பேசியதாவது:பெண்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த சைக்கிள் வழங்கும் திட்டம். பொறியியல் கவுன்சிலிங்கில் கூட கட்டணம் வசூலிக்கக்கூடாது என அங்கேயே உத்தரவு வழங்குகிறோம். ஜாதி, மோதல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மனிதநேய விழா நடத்தப்படுகிறது. அரசு வழங்கும் இந்த உதவிகளை பெற்று கல்வியில் சிறந்த இடத்தில் உயரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சுப்ரமணி பேசினார்.விழாவில் சேர்மன் குமரன், ஆதிதிராவிடர் அலுவலர் மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழுத்தலைவர் மணிமேகலை பழனிசாமி, ஆர்.டி.ஓ., ஷர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png