!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 28 மார்ச், 2015

பிளஸ் 2 இயற்பியல் தேர்விலும் குழப்பம்

           நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி' டைப் வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 14 வது கேள்வியில், '400 ஆம்ஸ்ட்ராங் அலைநீளமுள்ள ஒரு ஒளியானது 2 மைக்ரோ மீட்டர் தொலைவு கடந்த பிறகு உருவாக்கம் கட்ட வேறுபாடு' என கேட்கப்பட்டது.
 
           இது புத்தக பயிற்சி கேள்வியில் இருந்து கேட்கப்பட்டாலும் தேவையான தகவல்கள்  கொடுக்கப்படவில்லை. அதேபோல் 3 மதிப்பெண்ணில் 31 வது கேள்வியில் 'நிலை மின்னியலில் கூலோம் விதியை கூறுக' என கேட்கப்பட்டது. இதில் 'கூலும்' என்பதற்கு பதிலாக 'கூலோம்' என உள்ளது. 35 வது கேள்வியில் 'மீக கடத்திகளின் பயன்களில் எவையேனும் மூன்றினை எழுதுக' என கேட்கப்பட்டது. இதில் 'மீ' என்பதற்கு பதிலாக 'மீக' என உள்ளது. இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஒரு மதிப்பெண்ணில் 23, 24, 26, 30 வது கேள்விகளும் நேரடியாக கேட்கப்படவில்லை. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் தர வேண்டும்,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png